தமிழரது வீரயுகம் புராதன சுமேரியர், கிரேக்கர் முதலியோரின் வீரயுகங்களுடன் ஓருசேர வைத்து நோக்கும் பெருமையுடையது
க. கைலாசபதி

இது காலவரை தெரியவந்துள்ள வீரயுகங்களுள் காலத்தால் முந்தியது கிறித்துவிற்கு முன் மூவாயிரம் ஆண்டளவிலே மெஸொப்பொத் தோமியாவில் நிகழ்ந்த சுமேரிய வீரயுகமாகும். அதற்கடுத்தப்படியாகக் கிரேகத்தில் நிகழ்ந்த வீரயுகத்தைக் கொள்ளலாம். வட இந்தியாவில் இதிகாசங்கள் குறிக்கும் வீரயுகத்தையும் தவிர்த்தால், காலவரிசையில் அடுத்தப்படியாக அமைவது பழந்தமிழரது வீரயுகம் ஆகும். இது கிறித்துவிற்கு எழுநூறு ஆண்டுகள் முன்தொடங்கியிருக்கலாம். ஆயினும் பெரும்பாலும் கி.மு ஆறாம் நூற்றாண்டளவில் இது நிகழ்ந்தது எனக்கருதுவது பொருத்தமாகும். உலகின் பிறபகுதிகளிற் காணப்படும் வீரயுகங்களும் அவற்றைச்சேர்ந்த பாடல்களும் கிறித்துவிற்குப் பின் பல நூற்றாண்டுகள் கழிந்தே தோன்றின.அந்த வகையில், கால ஒழுங்கின்படி, தமிழரது வீரயுகம் புராதன சுமேரியர், கிரேக்கர் முதலியோரின் வீரயுகங்களுடன் ஓருசேர வைத்து நோக்கும் பெருமையுடையது எனலாம். (1968- 70,71)

க. கைலாசபதி

(பேராசிரியர் வீ. அரசு மேற்கோளாக குறித்தவை)

ப.23. சங்க இலக்கியம் பன்முக வாசிப்பு